Posts

பெண்கள் அதிகாரம்!

விபத்தில் இறந்த பெண் தொழிலாளியின் சொத்துகளை மீட்டுத் தந்த பெண்கள்! வாடிப்பட்டி பகுதியின் கிராமம் ஒன்றைச்சேர்ந்த பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு புகாரை வாடிப்பட்டி CPI ML கட்சியிடம் அளித்தார். அவரின் தங்கை 17 வயதில் படிப்பு முடித்து 28 வயது வரை அருகாமை ஊர் மருத்துவர் ஒருவரிடம் தாதியாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. +2 பாடத்துடன் வேலைவாய்ப்புப் பயிற்சியாக தாதிகளுக்கானப் படிப்பை முடித்த அவர், பிரசவம் பார்க்கும் அளவுக்கு தொழிலில் முன்னேறினார். அந்த மருத்துவரின் மருத்துவமனையிலேயே தங்கி அதனை நிர்வகித்து வந்தார். சென்ற ஆண்டு சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். அவரின் சம்பளம், கணக்கு வழக்கு, நகைகள் என்று அனைத்து விவரங்களையும் மேற்படி மருத்துவர்தான் பார்த்து வந்தார். தாதியின் மரணத்துக்குப் பின்பு அவரைச் சந்திக்க தாதியின் அக்கா சென்றிருக்கிறார். தங்கைக்குத் தர வேண்டிய பாக்கிகளைக் கோரியிருக்கிறார். தங்கை வைத்திருந்த நகைகள் எங்கே என்று கேட்டிருக்கிறார். மருத்துவர், உங்கள் தங்கைதான் எனக்குத் தர வேண்டும் என்று பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, விபத்து மரணத்து...
Recent posts